PUBLISHED ON : பிப் 19, 2022

அ நிறம் | அளவு
பட்டுப் பூச்சியில் கிடைக்கும் நுாலை விட, சிலந்தி பின்னும் வலை நுால் நேர்த்தியானது. அதிக வலுவுள்ளது. இதை கயிறு போல திரித்து எடை அதிகமுள்ள இரும்புக் கம்பியை துாக்கலாம்.
ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடைகளை, சிலந்தி வலை மூலப் பொருள் துணையுடன் உருவாக்க துவங்கியுள்ளது, அமெரிக்க ராணுவம். அறுவை சிகிச்சையின் போது, உடல் உறுப்புகளை தைக்க சிலந்தி வலையில் உருவாக்கிய நுாலைப் பயன்படுத்த ஆய்வுகள் நடந்துவருகின்றன.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், சிலந்தி வலை நுாலில் ஒருவர், 19ம் நுாற்றாண்டில் அழகிய துணி நெய்துள்ளார்.
- அ.யாழினி பர்வதம்
