PUBLISHED ON : நவ 20, 2021

சென்னை, நங்கைநல்லுார் நேரு அரசு பள்ளியில், 1973ல், பட்டதாரி ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். அப்போது என் வயது, 21. தலைமை ஆசிரியர் பி.எம்.சுப்பிரமணியன், என்னை ஒரு மாணவியாக நினைத்தார்.
ஆசிரியருக்கான குணங்கள், தியாக மனப்பான்மை, காலம் தவறாமை, சமுதாய அக்கறை என, அனைத்திலும் பயிற்சி கொடுத்தார்.
விடுமுறை நாட்களிலும், பள்ளி அலுவல்களை கவனிப்பார்; ஆங்கில தேர்வன்று காலை, 8:00 மணிக்கு, மாணவ, மாணவியருக்கு இலக்கண பயிற்சி கொடுப்பார்.
ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துவார். அந்த கண்டிப்பில், அக்கறையும், பாசமும் மிகுந்திருக்கும். முன்மாதிரி அரசுப்பள்ளியாக, அதை மாற்றிக்கொண்டிருந்தார்.
தற்போது என் வயது, 69; திருப்போரூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். மாணவர்கள் நலனுக்காக என் ஆசான் வழியில் தீவிரமாக உழைத்தேன்.
அந்த ஆசான், 95 வயதிலும் பள்ளி நடத்தி வருகிறார். ஆங்கிலம், வரலாறு வகுப்புகள் எடுக்கிறார். அடிக்கடி அவரை சந்தித்து வணங்கி, ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
- பி.லட்சுமி, செங்கல்பட்டு.
தொடர்புக்கு: 99405 13877
