PUBLISHED ON : ஜூன் 27, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
பால் - 1 கப்
தேன் - 1 தேக்கரண்டி
நாட்டுச் சர்க்கரை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப் பருப்பை, நீரில், ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்; பின், நீரை வடித்து, பால் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்த பின், பொடியாக்கிய நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இந்த கலவை சூடு ஆறியபின், தேன் கலக்கவும். சுவையும், மணமும் மிக்க, 'இனிப்பு பால் பருப்பு' தயார். சத்து மிக்கது. சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.
- ராஜி ஸ்ரீதர், சென்னை.
