தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அஞ்சரிசி!

அஞ்சரிசி!

அஞ்சரிசி!


PUBLISHED ON : ஜூலை 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், தேனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1980ல், 8ம் வகுப்பில் உடன் படித்த முருகேசனுக்கு, கணக்கு என்றால் கசப்பு; கடைசி பெஞ்சுக்கு ஓடி விடுவான். நண்பர்கள் நாசர்கான், முனியாண்டியுடன் சேர்ந்து அவன் கையை பிடித்து இழுத்து வந்து, முதல் பெஞ்சில் உட்கார வைப்போம். திரும்பவும் கடைசிக்கே ஓடி விடுவான்.

சாதாரண கூட்டல், கழித்தல், பெருக்கல் கூட புரியாமல் பதறுவான். அன்று, கணித ஆசிரியர் ஐயர், அவனை அழைத்து, 'ஒரு மூட்டை நெல் அரைத்தால், எவ்வளவு அரிசி கிடைக்கும்...' என கேட்டார். நிதானமாக, 'அரை மூட்டை கிடைக்கும் ஐயா...' என்றான். தொடர்ந்து பல அளவைகளை கேட்டபின், 'பத்து நெல் அரைத்தால்...' என்றார். தயங்காமல், 'அஞ்சரிசி கிடைக்கும் ஐயா...' என்றான். இதை கேட்டதும் வகுப்பறையே சிரித்தது.

அன்று முதல் அவனை, 'அஞ்சரிசி' என பட்டப் பெயர் சூட்டி அழைத்தோம். அது கிராமத்தில் பரவியது. தற்போது தச்சு வேலை செய்து வாழும் அவரை, அதே பெயரில் தான் அழைக்கின்றனர்.

எனக்கு, 56 வயதாகிறது; தனியார் கல்லுாரியில் அலுவலக பணியாளராக உள்ளேன். எண்களை முறைப்படி எடுத்துக்காட்டி கணக்கை கச்சிதமாக புரிய வைத்த அந்த ஆசிரியரின் நினைவு, நெஞ்சில் விழுந்த பூ போல சிரிக்கிறது.

- எஸ்.பாபு, மதுரை.

தொடர்புக்கு: 98657 79066


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us