தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெரியவர்!

பெரியவர்!

பெரியவர்!


PUBLISHED ON : ஆக 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்வேன் நாட்டில் வாழ்ந்த பெரியவர் பீலே, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, பயத்துடன் ஓடி வந்த இளைஞன், 'ஐயா... என்னைக் காப்பாற்றுங்க. ஒளிந்து கொள்ள இடம் கொடுங்க. இரவானதும், போய் விடுகிறேன்...' என்றான்.

தோட்டத்து வீட்டில் ஓர் அறையைக் காட்டி, 'ஒளிந்துக் கொள்; யாரும் உன்னைக் கண்டுபிடிக்க முடியாதபடி பார்த்துக் கொள்கிறேன்...' என்றார் பெரியவர்.

சிறிது நேரத்தில், ஓர் இளைஞன் உடலை சுமந்தபடி, சிலர் வந்தனர்.

அதைக் கண்டதும், 'என் மகனே... உன்னை யார் கொன்றது...' என்று கதறி அழுதார், பெரியவர்.

'உங்க மகனைக் கொன்றவனை பார்த்தோம். இந்த பக்கமாகத்தானே ஓடி வந்தான்; பார்த்தீரா...' என்று, அங்க அடையாளங்களைக் கூறினர்.

பெரியவருக்கு, 'பகீர்' என்றது.

சற்று முன், தோட்டத்து அறையில் பூட்டியவன் தான் என்ற விவரம் தெரிந்தது.

என்ன கொடுமை... மகனைக் கொன்றவனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் பெரியவர்!

ஒரு கணம் சலனமற்று நின்றவரிடம், 'ஓடி வந்தவனை பார்த்தீரா...' என்று மீண்டும் கேட்டனர்.

'இல்லை' என்று சொல்லும் பாவனையில், தலையை ஆட்டினார்.

உடலை துாக்கி வந்தவர்கள் போய் விட்டனர்.

மகன் பிரிவால் வருந்தியவர், இறுதி சடங்கை செய்தார். துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் பேசியதில் பகல் பொழுது கழிந்தது.

இரவானதும், யாருக்கும் தெரியாமல், தோட்டத்து அறைக்குச் சென்றார். கதவைத் திறந்து, அந்த இளைஞனைக் கூப்பிட்டார்.

'அப்பா... நீ கொன்றது யாரை தெரியுமா...' என்றார் பெரியவர்.

'தெரியாது...'

'என் மகனைத் தான்...'

'அப்படியானால், என்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறீரா...'

'இல்லை... நீ யார் என்று தெரியாமலேயே, அடைக்கலம் கொடுத்து விட்டேன்! இங்குள்ளவர்கள் பார்க்கும் முன், தப்பி ஓடி விடு...'

'ஐயா... இத்தனை உத்தமராகிய உங்கள் மகனைக் கொன்றேனே...' என்று கதறி அழுதான்.

'நேரமாகிறது... யாராவது உன்னைப் பார்க்கும் முன் ஓடி விடு...' என்றார் பெரியவர்.

தப்பி ஓட மனமின்றி, காவல்நிலையத்தில் சரண் அடைந்து உண்மையை ஒப்புக் கொண்டான் இளைஞன்.

குழந்தைகளே... உயர்ந்த மனம் கொண்டவர்களும் இந்த உலகில் வாழ்கின்றனர். அது போன்றவர்களை அடையாளம் கண்டு, உரிய மதிப்பு அளித்து வாழ வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us