PUBLISHED ON : ஆக 29, 2020

உயிரினங்களை வகைமைப்படுத்த, இரு பெயரிட்டு அழைக்கும் நடைமுறை அறிவியலில் உள்ளது. இதை உருவாக்கியவர், ஐரோப்பிய நாடன ஸ்வீடனைச் சேர்ந்த தாவரவியல் வல்லுநர் கரோலஸ் லின்னேயஸ். இருசொல் பெயர் முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
அசாடிரசக்டா இண்டிகா, ஹோமோ செப்பியன்ஸ் போன்றவை இருசொல் பெயரிடல் முறைக்கு சான்றுகள். இவை, முறையே வேப்பமரத்தையும், மனிதனையும் குறிக்கும் அறிவியல் பெயர்கள்.
முதல் சொல், பேரினப் பெயரை குறிக்கும். தொடர்ந்து வருவது சிற்றினத்தை குறிக்கும். பேரினம் என்பது பெயர்ச் சொல்லால் ஆனது. சிற்றினம், உரிச்சொல்லால் ஆனது.
'ஹோமோ' என்பது மனிதஇனத்தின் பேரினப் பெயர். 'செப்பியன்ஸ்' என்பது வளர்ச்சியடைந்த தற்கால மனிதனைக் குறிக்கும். அதாவது புத்திசாலி மனிதன் என்று பொருள்.
பரிணாம வளர்ச்சியில், முந்தைய மனித இனத்தை, ஹோமோ எரக்டஸ் எனப்பர். இதற்கு, நிமிர்ந்த மனித இனம் என்று பொருள்.
