PUBLISHED ON : பிப் 26, 2016

கடும்புயலும் அவற்றின் அட்லான்டிக் நண்பரான சூறாவளியும், வெப்ப மண்டல கடலின் வெது வெதுப்பான தண்ணீரில் உருவாகிறது. கோடை சூரியன் தண்ணீரை உஷ்ணப்படுத்த, அது சூடுபெற்று நீராவியாக உயர்ந்து நீர் மேகங்களாகின்றன.
ஈரமும், சக்தியும் கடலினின்று கிடைக்க இந்த துண்டு நீர் மேகங்கள் ஒன்றாகி மிகப் பெரிய காற்றழுத்த மண்டல நீர் சுழற்சிகளை உருவாக்குகிறது.
சிறிய மாற்றமோ அல்லது சிற்றலை காரணமாகவோ பொதுவான கிழக்கு காற்று வீச்சு மேகங்களை எதிர் சுழற்சியில் சூழலச் செய்து நீர் சுழற்சிகளை வடக்கு அல்லது தெற்கு நோக்கி அனுப்புகிறது. இதுபோன்ற வெப்ப மண்டல காற்றழுத்த மண்டலங்கள் பொதுவாய் சக்தியையும், ஈரத்தையும் போகிற போக்கில் பெற்று கொண்டே மேற்கு பக்கம் நகரும்.
வடக்கு நடுநிலை கோட்டு பகுதியில் ஒன்றிணையும் காற்று மின்னோட்டங்கள், ஒரு பெல்ட் போல தோற்றத்தில் மேற்கு பசிபிக் கடலில் கடும்புயல்கள் தோன்ற காரணமாகிறது.
உயர கிளம்பும் நீர்சூழல் - வெப்ப மண்டல பகுதி கடலின் மேல் காணலாம். இது கடும்புயலுக்கான அறிகுறியாகும்.
வியாபார காற்றுகள் ஒன்றோடு ஒன்று மோதுகையில் வலிமையான மேல்நோக்கி செல்லும் காற்று உருவாகி குடுவை மேகங்களை தோற்றுவிக்கின்றன.
புயல் வெப்ப மண்டல கடலினின்று சக்தியையும், நீரையும் பெற, காற்று மேலும் மேலும் வலுப்பட நீர்சுழற்சியின் மையப்புள்ளி ஸ்திரமாகிறது.
மேலெழும்பும் காற்றின்போது ஈரப்பதமான மற்றும் வெதுவெதுப்பான காற்று உள்ளிழுக்கப்படுகிறது. அப்போது மையப்பகுதியில் குறைந்த அழுத்த நிலை புயலில் மாறுதல் ஏற்பட்டு சுழலும் திசை எதிர்திசையாகிறது. மேலும், அதிக காற்று உள்ளிழுக்கப்பட்டு புயலின் விஸ்தீரணம் விரிவடைகிறது. புயலின் மேற்புறத்திலோ உயரமான காற்று வீச்சு மேகங்களை சுழற்சியின் எதிர் திசைக்கு இழுக்கிறது.
கடும் புயல் மண்டலங்கள்!
கடும்புயல்களும், சூறாவளியும் பூமத்திய ரேகைக்கு மேலும், கீழும் அதாவது வடக்கும், - தெற்குமாக 5 டிகிரி முதல் 20 டிகிரி பகுதியில் உருப்பெறுகிறது. இங்கேதான் வெப்ப மண்டல கடல் 27 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேலாக (பிங்க் பகுதிகள்) இருக்கிறது. இதனை போல மூன்று மடங்கு அல்லது அதற்கும் மேலாக தெற்கு பாதி பூமி உருண்டை பகுதியை விட வடக்கு பாதி பூமி உருண்டையில் புயல்கள் உருவாகின்றன.
பொதுவாய் இப்புயல்கள் மேற்கு நோக்கியே நகரும். பின் பூமத்தியரேகையிலிருந்து சுழன்று வட பூமியின் வடப்பகுதியிலும், தெற்கு பூமியின் தெற்கு பகுதியிலும் வீசுகிறது.
புயலின் மையப் புள்ளி!
காற்று, புயலின் மையப் புள்ளியை நோக்கி வீசும்போது அது விளைவுகளை மாற்றும் சக்தியாகிறது. மையத்தினின்று விலக்கும் விசை, காற்றை மையத்தினின்று விலக்குகிறது. சாய்வுத் தன்மை விசை காற்றை உள்ளிழுக்கும். புயலின் மையப் புள்ளியில் இவ்விரு விசையும் சமமாக இருக்கும். இவை காற்று உள்வருவதை தடை செய்கிறது. ஒரு வட்டமான, குறைந்த அழுத்த மையப்புள்ளி உருவாகிறது. இதனால் புயலின் மையப்புள்ளி யின் அருகே தெளிவான நிலையை வைக்கிறது.
