PUBLISHED ON : பிப் 19, 2022

அ நிறம் | அளவு
யானையின் உடல் உறுப்பான தும்பிக்கை, வளையம் போன்ற தசைகளின் இணைப்பாக உள்ளது. அதில், 1.5 லட்சம் தசைநார்கள் இணைந்துள்ளன; அதன் உதவியால், ௧,௦௦௦ கிலோ எடையை எளிதாக யானையால் துாக்க முடியும்; தும்பிக்கையில் உள்ள துவாரங்கள்தான், யானையின் நாசி.
ஒரு பெரிய யானையின் தும்பிக்கை எடை, 140 கிலோ வரை இருக்கும். ஒரே மூச்சில், 12 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி உடலில் பீச்சி அடிக்கும் திறன் கொண்டது.
யானைக்கு மோப்பம் பிடிக்கும் உறுப்பாகவும் உதவுகிறது தும்பிக்கை. அதில் காயம் ஏற்பட்டாலோ, துண்டிக்கப் பட்டாலோ உடனடியாக இறந்து விடும்.
- யாழினி
