PUBLISHED ON : மார் 22, 2011
டைனோஸர்!
தேவையான பொருட்கள்: பச்சை மற்றும் ப்ரவுன் மாடலிங் க்ளே, ஒரு ஷீட் மார்பிள் பேப்பர், கத்தரிகோல், உள்ளே இருக்கும் பொருள் வெளியே தெரியும் படியான பிளாஸ்டிக் டப்பா ஒன்று மூடியுடன்.
செய்முறை:
1) பச்சை நிற மாடலிங் க்ளேயில் ஒரு பெரிய உருண்டை உருட்டிக்கொள்ளவும். இது டயனோஸரின் உடல் பகுதிக்கான க்ளே. இதேபோன்று டயனோஸரின் மற்ற உறுப்புக்கள் செய்வதற்கான க்ளேயும் சிறு சிறு உருண்டைகளாக படத்தில் உள்ளது போன்று உருட்டிக் கொள்ளவும்.
2) டயனோஸரின் உடலை வால் பகுதி அகன்றும், தலைப் பகுதி குறுகியும் இருக்கும்படி செய்துக் கொள்ளவும். கண்களும் வரைந்துக் கொள்ளவும்.
3) டயனோஸரின் கை மற்றும் கால்களை செய்து உடலில் இணைக்கவும். இப்ப டயனோஸரின் முதுகுப் பகுதியிலுள்ள செதில்களை சிறிது சிறிதாக செய்து ஒட்டவும்.
4) சிறிது பச்சை நிற க்ளேயில் ஒரு டயனோஸர் முட்டையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
5) பச்சை மார்பிள் பேப்பரில் புல் மற்றும் புதர்களை கட்செய்து வைத்துக் கொள்ளவும்.
6) ஒரு பாறை கல் போன்று ப்ரவுன் மாடலிங் க்ளேயில் செய்துக் கொள்ளவும்.
7) இப்ப இவையெல்லாவற்றையும் பிளாஸ்டிக் டப்பாவுக்குள் வைத்து அழகு படுத்தவும். டப்பாவை மூடி உங்க வீட்டு '÷ஷாகேஸில்' வைத்து அழகுப்படுத்துங்கள்!
