PUBLISHED ON : ஏப் 08, 2011

குச்சி வண்ணத்துப் பூச்சி!
தேவையான பொருட்கள்: அகலமான பாத்திரம் ஒன்று, ஸ்பூன், இரண்டு கப் மைதாமாவு, ஒரு கப் உப்பு, ஒரு கப் தண்ணீர், சப்பாத்திப் போடும் பலகை மற்றும் உருளை, பல் குத்தும் குச்சி, பசை, வாட்டர் கலர்கள், பெயின்ட் பிரஸ்.
செய்முறை:
1. பாத்திரத்தில் இரண்டு கப் மாவும், ஒரு கப் உப்பும் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசையவும்.
2. ஒரு உருண்டை மாவை எடுத்து 5 மில்லி மீட்டர் கனத்தில் சப்பாத்திப் போடவும்.
3. சப்பாத்தியில் வண்ணத்துப் பூச்சி படம் வரைந்து அதை கட் செய்து எடுக்கவும்.
4. பல் குத்தும் குச்சியை வண்ணத்துப்பூச்சியின் அடிப்பகுதியில் ஒட்டி ஒரு செய்தித்தாளை வைத்து அதன் மீது உலர வைக்கவும் அல்லது 120 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு சூடாக்கவும்.
5. உலர்ந்ததும் மஞ்சள் மற்றும் நீல நிற பெயின்ட் அடித்து அழகுபடுத்தவும்.
6. குச்சி வண்ணத்துப் பூச்சியில் இருந்து விழாமல் இருப்பதற்கு பசை போட்டு ஒட்டவும்.
இப்ப குச்சி வண்ணத்தும் பூச்சி ரெடி. இப்படி பல வடிவங்களில் செய்து மகிழலாம்.
