PUBLISHED ON : மே 11, 2018

அ நிறம் | அளவு
விஞ்ஞானி சி.வி.ராமன், தினமும் கல்லுாரிக்கு நடந்தே செல்வார். ஒருநாள் வீடு திரும்பும் போது, வழக்கமான பாதையை விட்டு, வேறொரு தெருவில் திரும்பினார். அங்கே, ஒரு வீட்டிலிருந்து, வீணை ஒலி மிதந்து வந்தது. சற்றுநேரம் நின்று ரசித்தார்.
மறுநாளிலிருந்து, அதே தெருவில் சென்று, வீணையின் நாதத்தை அனுபவிப்பது, வழக்கமாகி விட்டது.
ஒரு நாள், 'இவ்வளவு இனிமையாக வீணை வாசிப்பது யார்!' என்று தெரிந்து கொள்ள, ஜன்னல் வழியே, எட்டி பார்த்தார். ஒரு அழகான பெண், வீணை வாசித்துக் கொண்டிருந்தார்!
ராமனுக்கு திருமணப் பேச்சு வந்த போது, நைசாக, வீணை பெண் பற்றி தெரிவித்தார். அப்புறம் என்ன... அந்தப் பெண்தான் அவர் மனைவி லோக சுந்தரி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ...
