தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/'வீ டூ லவ்' சிறுவர் மலர்!

'வீ டூ லவ்' சிறுவர் மலர்!

'வீ டூ லவ்' சிறுவர் மலர்!


PUBLISHED ON : செப் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் பெயர் மிருதுபாஷிணி. என் பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாமே ஐதராபாத்தில்தான். கோடை விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்னை வருவேன். எனக்கு ஹிந்தியும், தெலுங்கும்தான் எழுதப் படிக்க தெரியும். ஆங்கில வழியில் படித்தேன். வீட்டில் தமிழ் பேசுவோம் அவ்வளவுதான்.

ஒருமுறை பாட்டி வீட்டில் இருந்த சிறுவர்மலர் இதழை பார்த்து படங்களால் ஈர்க்கப்பட்டு கதை சொல்லும்படி தாத்தாவை நச்சரித்தேன்.

அவரும் அதை படித்து சொன்னார். ஒவ்வொரு முறையும் என் தொல்லை பொறுக்காமல், 'நீயே படி!' என்றார். 'எனக்குத்தான் தமிழ் வாசிக்கத் தெரியாதே!' என்றேன்.

உடனே பாட்டியும் தாத்தாவும். தினமும், தமிழ் எழுத, படிக்க டியூஷன் எடுத்தனர். நானும் விருப்பத்துடன் மெதுவாக எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்தேன். ஊர் திரும்பியதும் தமிழில் கடிதம் எழுதினேன். இப்போது போல, மொபைல் வசதி அப்போது இல்லை அவர்கள் என்னைப் பார்க்க வரும் போதெல்லாம், பிறந்த நாள், கிறிஸ்துமஸ் பரிசாக சின்ன சின்ன கதை புத்தகங்கள் தந்தனர். ஆறு, ஏழு சிறுவர் மலர் இதழ்களை தைத்து கொண்டு வந்து தருவார் தாத்தா.

இப்படித்தான் சிறுவர் மலரோடு நானும் வளர்ந்தேன். இப்போது, என் 3 வயது மகனுக்கும் சிறுவர்மலர் கதைகளைப் படித்து இரவில் கதை சொல்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன். நாளை என் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகளுக்கு இந்தக் கதைகளை, 'பேஸ் புக்,' 'வாட்ஸ் அப்' ஏன் 'மெயில்' கூட பண்ணலாம். அவர்களும் படித்து மகிழலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் கதையும் சொல்லலாம். தலைமுறை தலைமுறையாக சிறுவர்மலர் மட்டும் தரம் குறையாமல் மணந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் கற்க காரணமாகிய சிறுவர்மலர் இதழை என்றும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

-சி.மிருதுபாஷிணி, ஆலந்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us