PUBLISHED ON : ஜூன் 22, 2018

அ நிறம் | அளவு
என் தாத்தா, ராஜகோபால் ஓய்வு பெற்ற ஆசிரியர்; வயது, 93; மாணவர்களுக்கும், பேரக் குழந்தைக்களுக்கும், நல்ல கதைகளை சொல்வதில் வல்லவர். பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை விரும்பி படித்து வருவதோடு, அவர் படித்ததை, எங்களுக்கும் சொல்லுவார்.
'இன்று, என்ன கிழமை...' என, தினமும் கேட்டபடியே இருப்பார். வெள்ளியன்று, சிறுவர்மலர் அவரிடம் கொடுத்து விட்டால் போதும், சிறு குழந்தை போல ஆகிவிடுவதை ரசித்து வருகிறோம்.
கண்ணாடி அணியாமல், 93 வயதில், சிறுவர்மலர் இதழை படித்து மகிழும், என் தாத்தா, 100 வயதிற்கும் மேல், சிறுவர்மலர் படித்துக் கொண்டிருப்பார் என்பதே, என் நம்பிக்கை.
என் தாத்தாவை இப்படி மயக்கிய சிறுவர்மலரே... நீ வாழ்க பல்லாண்டு!
- எஸ்.பிரவீன் குமார், திண்டிவனம்.
