PUBLISHED ON : ஆக 02, 2019

அ நிறம் | அளவு
அரசுப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன். அதில் வரும், நீதிக்கதைகள், நகைச்சுவை துணுக்குகள், 'ஸ்கூல் கேம்பஸ்!' என, அனைத்தும் பிடிக்கும்.
சிறுவர்மலர் இதழில் வெளிவரும், சிறுகதை, நகைச்சுவைகளை, பள்ளி இறைவணக்க கூட்டத்தில், மாணவ, மாணவியருக்கு தினமும் கூறுவேன்; விரும்பி கேட்பர்.
ஆரோக்கியம் தரும் தேன் போன்றது சிறுவர்மலர். தேனுக்கு தனி பண்பு உண்டு. அது, தானும் கெட்டுப் போகாது; தன்னைச் சார்ந்தவற்றையும் கெட்டுப்போக விடாது; அது போல் தான் சிறுவர்மலர். அது மாபெரும் பொது அறிவு புதையல்.
தமிழில் பல பட்டங்கள் பெற்றுள்ளேன். அவற்றுக்கொல்லாம் உறுதுணையாக உதவிய, சிறுவர்மலர் இதழ், என் எண்ணத்தில் எப்போதும் நிறைந்திருக்கும்.
- கு.செல்வம், விருதுநகர்.
