PUBLISHED ON : டிச 28, 2019

என் வயது, 66; சிறுவர்மலர் இதழ் துவங்கியது முதல் தொடர்ந்து படித்து வரும், லட்சக்கணக்கான வாசகர்களில் ஒருவன். இந்த வயதிலும், படக்கதைகளை ஆர்வமாகப் படிக்கிறேன். சிறுவர்மலர் இதழில், படக்கதைகள், நீதியை சிறப்பாக போதிப்பது விசேஷம்.
'தமிழ் மொழியை வேகமாகவும், சுலபமாகவும் வாசிக்க, சிறுவர்மலர் படக்கதைகளைப் படித்தால் போதும்...' என்று, என் ஏழு வயது பேத்தியை அறிவுறுத்தியுள்ளேன்.
சிறுகதை, மினிதொடர், மொக்க ஜோக்ஸ், விஞ்ஞானக் கட்டுரை என, எல்லாம் சுவாரசியமாகவும், பாராட்டும் வண்ணமும் உள்ளன.
பெரிய பத்திரிகை நிறுவனங்கள் காலங்காலமாக நடத்தி வந்த, சிறுவர் இதழ்களை நிறுத்தி விட்ட நிலையில், அலைபேசி, தொலைகாட்சி போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்களுக்கு ஈடு கொடுத்து, வாசிப்பை ஊக்குவித்து வெற்றி நடை போடுகிறது சிறுவர்மலர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பணி தொடர வாழ்த்துகிறேன்.
- ஆர்.ரெங்கராஜன், மதுரை.
தொடர்புக்கு: 93606 92938
