PUBLISHED ON : ஜன 11, 2020

என் வயது, 87; மகளுடன், வசிக்கிறேன். சிறுவர்மலர் இதழை, என், 60 வயதிலிருந்தே வாசித்து வருகிறேன். இதுவரை, 600 இதழ்களை சேமித்து வைத்துள்ளேன். எதையும் விடாமல் படித்து விடுகிறேன். விலை மதிக்க முடியாத பொக்கிஷம் சிறுவர்மலர்.
'புதிர்' போட்டிகளில் சுவாரசியமாக விடை கண்டுபிடிப்பேன். குழந்தைகள் வரையும் ஓவியங்களை ரசிப்பேன். பொதுஅறிவு தகவல்களை வாசித்து, மனதில் நிறுத்துவேன்.
'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' சமையல் குறிப்பை சேகரித்து வைத்துள்ளேன். தக்க சமயத்தில், கேட்பவருக்கு கொடுப்பேன். அறிவுரை தரும், 'இளஸ்... மனஸ்...' பகுதியை படித்து, அக்கம் பக்கத்தவருடனும் பகிர்வேன்.
மிகவும் ரசிப்பது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியைத் தான். கடிதங்களை படிக்கும் போது, அந்த பள்ளிக்கு போனதாக உணர்கிறேன்.
சேமித்து வைத்துள்ள இதழ்களை, குழந்தைகளிடம் அவ்வப்போது கொடுத்து, படிக்க வைக்கிறேன்.
சிறுவர்மலர் இதழைப் படிப்போர், நாட்டுக்கு தொண்டாற்றும் நல்ல குடிமக்களாக வருவர். என் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
- பார்வதி, கோவை.
