PUBLISHED ON : ஜூன் 27, 2020

அ நிறம் | அளவு
என் வயது, 80; குடும்பத்தலைவி. சனிக்கிழமை காலை, சிறுவர்மலர் இதழுக்காக காத்திருப்பேன். அதை காணும்போது ஏற்படும் மகிழ்ச்சியை, வார்த்தைகளில் வடிக்க இயலாது!
சிறுவர்மலர் இதழில் முதலில் படிப்பது, அங்குராசுவின் கட்டுரைப் பகுதியை தான்; பின், கதை, கட்டுரை என அனைத்தையும் படித்து அலசி ஆராய்வேன். பள்ளி நாட்களை நினைவுப்படுத்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' உணர்வுகளால் நிரம்பியுள்ளது.
பாரம்பரிய உணவு தயாரிக்க, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' கற்றுத்தருகிறது. பிரச்னைகளுக்கு பதில் கூறும், 'இளஸ் மனஸ்!' அறிவுரைகள் அனுபவப்பூர்வமானவை. மாணவ, மாணவியர் வரையும் ஓவியங்களை, 'உங்கள் பக்கம்!' பகுதியில் கண்டு மகிழ்கிறேன்.
சிறுவர்மலர் இதழ் மென்மேலும் வளர வாழ்த்துகள்!
- க.சிவகாமசுந்தரி, கோவை.
