PUBLISHED ON : ஆக 29, 2020

அ நிறம் | அளவு
என் வயது, 55; சிறுவர்மலர் இதழை விரும்பி படித்து வருகிறேன். படிக்கும் புத்தகங்களை எல்லாம் பத்திரப்படுத்தி உள்ளேன்.
அவற்றிலிருந்து, என் பேரனுக்கு, அறம் வளர்க்கும் கதைகளை கூறுகிறேன். விரும்பி கேட்டு ரசிக்கிறான். 'உங்கள் பக்கம்' பகுதியில், படங்களைப் பார்த்து வண்ண பென்சிலால் கிறுக்கி மகிழ்கிறான். இது, பெருமையாக இருக்கிறது.
குழந்தை முதல், முதியவர் வரை விரும்பி படிக்கும் வாடாமலராக திகழ்கிறது சிறுவர்மலர்! பேணி காக்க வேண்டிய காலப்பெட்டகம். இதற்கு நிகராக எந்த இதழையும் சொல்ல இயலாது.
சிறுவர்மலர் இதழின் சேவை தொடர வாழ்த்துகிறேன்!
- எஸ்.ஆண்டாள், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 76390 37675
