தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 67; பள்ளிப் படிப்பை, 9ம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர் பெற்றோர். வயதிற்கு வந்த பின், வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

உற்ற தோழியராக புத்தகங்களை பாவிக்கத் துவங்கினேன். அதிலும் என் முதல் வாசிப்பு புத்தகம், சிறுவர்மலர். கதை, கட்டுரை, 'இளஸ்... மனஸ்...' பகுதிகளைப் படித்து, உறவினர் மற்றும் அக்கம்பக்கத்து சிறுவர், சிறுமியருக்கு சொல்லி மகிழ்வேன்.

என் தனிமையை போக்கும் வகையில், மழலையர் கூட்டம் எப்போதும் உடனிருக்கும். நானும், 'சிறுவர்மலர் எப்ப வரும்' என காத்திருப்பேன். திரும்ப திரும்ப, சலிப்பில்லாமல் படிக்கும் வகையில் உள்ளதால் பொக்கிஷமாக கருதுகிறேன்.

'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை படிக்கும் போது, என் பள்ளி அனுபவம் நினைவில் வந்து போகும். அறிவியல் பேசும், அங்குராசு பகுதியும் மிகவும் விருப்பமானது. இவை எல்லாம், என் பேரன், பேத்தியருக்கும், உற்சாகம் தரும் டானிக்காக உள்ளன. புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்!

பள்ளியில், ஆங்கில வழியில் பயிலும் சிறுவர்கள், எளிமையாக தமிழ் கற்க உதவுகிறது. கணவர் மறைந்த பின், சோகம் தீர்க்கும் அருமருந்தாக சிறுவர்மலர் இதழை பாவித்து வருகிறேன்.

- வசந்தா சிவஞானம், கோவை.

தொடர்புக்கு: 91760 10065

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us