PUBLISHED ON : ஜூன் 19, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 57; சிறுவர்மலர் இதழை ரசித்து படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் ஒருவன். எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டவில்லை. தமிழ் மொழி போல், இனிமை நிறைந்துள்ளது.
ஆசிரியராக பணியாற்றுவதால், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை மிகவும் விரும்புவேன். அதில், மாணவர்கள் வாழ்க்கைக்கு, நல்வழிகாட்டிய ஆசிரியர்களைப் பற்றி படிக்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது; என்னை பட்டை தீட்டும் கருத்துக்களைக் காண்பதால் உத்வேகம் பிறக்கிறது.
சிறுவர்மலர் இதழில் வரும் சிறுகதைகளை படித்து, மாணவர்களுக்கு சொல்வதால், கலகலப்பாக மாறுகிறது வகுப்பறை. இந்த இணைப்பிதழுக்கு, இணை எதுவும் இல்லை என சொல்லும் அளவிற்கு, ஆசிரியர், மாணவர் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.
- பி.வி.மோகன், சிவகங்கை.
தொடர்புக்கு: 94860 32680

