PUBLISHED ON : பிப் 26, 2022

என் வயது, 47; அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். தீவிர வாசிப்பு பழக்கம் உள்ளவன். இனிமையாக கற்பிக்க, சிறுவர்மலர் உதவியாக உள்ளது. மிகப்பெரிய உந்துதலையும், உற்சாகத்தையும் தருகிறது.
சிறுவர்மலர் இதழில் இடம் பெறும், சிறுகதை, தமாசு, கட்டுரை, கடிதம் என, அனைத்தையும், வகுப்பறையில் பாடத்தின் இடையே, தேவையான இடங்களில் பயன்படுத்தி வருகிறேன்.
புதுமை தகவல்கள் கூறும்போது, மிகுந்த அக்கறையுடன் கவனிக்கின்றனர், மாணவர்கள். ஒருவகை ஈர்ப்புடன், என் வகுப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றனர். கவனம் சிதறாமல் கற்கின்றனர். இந்த செயல்பாட்டின் பலனாக, நல்லாசிரியருக்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளேன்.
புதிய பாடநுால் உருவாக்கும் குழுவிலும் இடம் பெற்றுள்ளேன். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான தமிழ் பாடநுால்களை உருவாக்கியுள்ளேன். என் கல்விப் பணி சிறக்க, சிறுவர்மலர் இதழ் உதவி வருகிறது.
- மா.பழனி, தர்மபுரி.
தொடர்புக்கு: 86681 90156
