தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மே 07, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 26; ஆசிரியையாக பணிபுரிகிறேன். தினமலர் நாளிதழுடன், 20 ஆண்டாக பழகி வருகிறேன். என் தந்தை, வங்கியில் பணிபுரிபவர்; நிறைய பத்திரிகைகள் வாங்கி வருவார்.

அவற்றில் எனக்கு பிடித்தது சிறுவர்மலர் தான். என் குழந்தை பருவத்திலே சிறுவர்மலர் இதழில் வரும் சிறுவர், சிறுமியர் படங்களை, தனியே அமர்ந்து ஆர்வமுடன் பார்த்ததாக பெற்றோர் தெரிவிப்பர்.

சிறுவர்மலர் இதழில் கதைகளைப் படித்து, புதிய கதை போல் சொல்வேன். இதை மிகவும் விருப்பமுடன் கேட்பர் என் தோழியர். இதில் வரும் படங்களைப் போல் வரைந்து பழகி, ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். கதை, கட்டுரை, கவிதை படைக்கும் ஆற்றலும் பெற்றுள்ளேன். ஓவியராகவும் திகழ்கிறேன்.

இதற்கெல்லாம், சிறுவர்மலர் இதழ் தான் காரணம்! தினமலர் நாளிதழ் வழங்கிய, 'லட்சிய ஆசிரியர்' விருது பெற்றுள்ளேன். பாடம் நடத்தும் போது, என் மனதிற்கு பிடித்த சிறுவர்மலர் இதழில் வரும் தகவல்களை அதிகமாக பயன்படுத்துகிறேன்!

- ரெ.கயல்விழி, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us