PUBLISHED ON : ஜூன் 04, 2022

என் வயது, 67; ஓய்வு பெற்ற ஆசிரியை; சிறுவர்மலர் இதழை, 15 ஆண்டு காலமாக படித்து வருகிறேன். அதில் வரும் கதைகளை வகுப்பில் கூறி, பாடத்தை துவங்குவேன்.
சனிக்கிழமைகளில் வகுப்பறை மேஜையில் சிறுவர்மலர் மற்றும் சிறுகதை புத்தகங்களை வைத்து விடுவேன். மாணவர்கள் ஆர்வத்துடன் எடுத்து வாசிப்பர்.
படித்தவற்றில் மனதைக் கவர்ந்த செய்திகளைக் கூற வைப்பேன். குழுக்களாகப் பிரித்து, கதை, பாடல் என விருப்பப்படி விபரம் சேகரித்து, ஆல்பம் தயாரிக்க வைப்பேன். அவற்றில் இன்றும் சில உள்ளன.
என் பேரன், பேத்தியரையும், படக்கதைகள், ஸ்கூல் கேம்பஸ், சிறுகதைகள், வாசிக்க வைப்பேன். ஒரு பேரனுக்கு, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதி மனதை கவர்ந்துள்ளது. ஓவியம், புதிர் பகுதியையும் விரும்புவான்.
அசத்தலான விஷயங்களுடன், 'அதிமேதாவி அங்குராசு' பகுதி, பெரியோர் மனதையும் கவர்ந்துள்ளது. சிறுவர்மலர் இதழ்களை தொகுத்து, புத்தகங்களாக, 'பைண்ட்' செய்து வைத்துள்ளோம். வருங்கால சந்ததியினர் இதை படித்து மகிழ்வர்.
வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கு வழிகாட்டியாக இருப்பது சிறுவர்மலர். சிறியோரை, பெரியோராகவும், பெரியோரை, சிறியோராகவும் மாற்றும் மாயாஜால இதழ்!
- இ.உஷா, சென்னை.
தொடர்புக்கு: 99406 39798

