PUBLISHED ON : ஜூன் 25, 2022

என் வயது, 70; பேரனுக்கு, 7 வயதாகிறது. சிறுவர்மலர் இதழை யார் முதலில் படிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி நடக்கும்!
'தமாசு பகுதியை படித்தபின் தருகிறேன்...' என்பேன் நான்.
'படக்கதையை படித்து தருகிறேன்...' என, பிடுங்கிக் கொள்வான் பேரன்.
'ஸ்கூல் கேம்பஸ் கடிதங்களை படித்த பின் தருகிறேன்...' என்றால், மறுத்து பிடிவாதம் பிடிக்கிறான். இப்படியே பலத்த போட்டி ஏற்படுகிறது.
அக்கம் பக்கத்தில் வசிப்போர், 'தாத்தா - பேரன் இடையே சரியான போட்டி...' என பாராட்டி சிரிப்பர். என் போன்ற பெரியவர்களை, மனதளவில் சிறுவராக்கி, சிறுவர்களை அறிவில் பெரியவராக்கும் அற்புதத்தை நிகழ்த்துகிறது, சிறுவர்மலர் இதழ்.
வண்ணங்கள் நிறைந்த, 'தினமலர்' என்ற பூந்தோட்டத்தில், சனிக்கிழமைகளில் மலரும், சிறுவர்மலர் இதழ் வாசம் அனைவரையும் வசப்படுத்துகிறது.
- சொ.காளிதாசன், கடலுார்.

