PUBLISHED ON : ஜூலை 30, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 64; அங்கன்வாடியில், 40 ஆண்டுகள் பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பின், நான்கு ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை தவறாமல் வாசித்து வருகிறேன்.
கொரோனா தொற்று கால ஊரடங்கின்போது, சிறுவர்மலர் இதழில் வந்த சிறுகதைகளை, என் பேர குழந்தைகளுக்கு கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அக்கம் பக்கத்தில் வசிக்கும், சிறுவர், சிறுமியரும் இதை விரும்பி கேட்டதால் கதை சொல்வதை தொடர்கிறேன்.
சிறுவர், சிறுமியருக்கு, 'உங்கள் பக்கம்' பகுதியில் உள்ளது போல், ஓவியம் வரையக் கற்று கொடுக்கிறேன். படக்கதையையும் வாசிக்க வைக்கிறேன்.
இளஸ்... மனஸ்... பகுதி, ஸ்கூல் கேம்பஸ் மற்றும் மொக்க ஜோக்ஸ் பகுதிகளையும் படித்து கூறி மகிழ்ச்சி ஊட்டிவருகிறேன். சிறுவர்மலர் இதழ் மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம்!
- ஜெ.சரஸ்வதி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 99528 54980

