
என் வயது, 72; தனியார் பேருந்தில், நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் மனைவி ரத்தினம், அரசு பள்ளி சத்துணவு பொறுப்பாளராக பணி செய்து, ஓய்வு பெற்றவர். இருவரும், தினமலர் நாளிதழ் இணைப்பான சிறுவர்மலர் இதழை படிக்கும்போது புது உற்சாகம் பெறுகிறோம்.
வயது வித்தியாசமின்றி கவர்ந்திழுக்கும் சக்தி படைத்தது சிறுவர்மலர். இளமை நினைவுகளை மனத்திரையில் ஓட விட்டு, ரசிக்க வைக்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, அறிவை செம்மைப்படுத்தும், அற்புத கருத்துகளை தரும், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி, சகோதரி பிளாரன்ஸ் கூறும், வாழ்க்கையை வளமாக்கும் அறிவுரைகள், நீதி புகட்டும் சிறுகதைகள் என எல்லாம் சிறப்பாக உள்ளன.
சிறுவர்களை வசப்படுத்தும் படக்கதைகள், சுவை, ஆரோக்கியமிக்க பதார்த்தங்கள் செய்ய கற்றுத் தரும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி, வயிறு குலுங்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்!' திறமைக்கு பரிசளிக்கும், 'புதிர்!' போட்டி, மனதை இதமாக்கும், 'குட்டி குட்டி மலர்கள்!' என, வியக்க வைக்கிறது.
வாசம் பரப்பும் சிறுவர்மலர் இதழை என்றும் நுகர்ந்திடுவோம். எல்லாரையும் நுகர வைத்திடுவோம்.
- வி.வரதராஜன், திண்டுக்கல்.

