PUBLISHED ON : ஜூன் 24, 2023

என் வயது, 30; இல்லத்தரசி. சிறுவர்மலர் இதழை, 10 வயது முதல் படித்து வருகிறேன். இதனால், வாசிப்பு திறன் மேம்பட்டுள்ளது. பக்கத்திற்கு பக்கம் அறிவை அள்ளி தரும் நுாலகம் என்று சொல்லலாம் சிறுவர்மலர் இதழை!
மழலைச் செல்வங்களை அறிவுடன் உருவாக்கும் நவீன சிற்பி; படைப்பாளிகளை ஊக்குவித்து, நவீன சிந்தனைகளை வளர்க்கிறது. பயிற்றுவித்த ஆசான்களை புகழ்ந்து வணங்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, படு அமர்க்களம். சமையல் ராணிகளை ஊக்குவிக்கும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதி வரப்பிரசாதம்.
இதமான அறிவுரை, 'இளஸ்... மனஸ்...' பகுதியில் தவழ்கிறது. மழலை செல்வங்களின் ஓவியங்கள், சிரிப்பூட்டும், 'மொக்க ஜோக்ஸ்' என பாராட்ட தக்க அம்சங்களுடன், நவரசம் ததும்பும் இதழ், சிறுவர்மலர். வையகம் உள்ளவரை சிறுவர்மலர் இதழின் நறுமணம் பரவட்டும்!
- என்.பாரதி, தேனி.
தொடர்புக்கு: 93457 90943