தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூலை 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 64; எல்.ஐ.சி., முகவராக பணி செய்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும், தினமலர் நாளிதழுடன் இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழை ஆவலுடன் படிப்பேன். குழந்தைகளின் புகைப்படங்கள் என் பேரப்பிள்ளைகளை போல் காட்சியளிக்கும். அவை மனதை அமைதியாக்குகின்றன.

சிறுவர், சிறுமியர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள், 'உங்கள் பக்கம்!' பகுதியில் அற்புதம். குழந்தைகளின் திறனை அழகாய் வெளிக்கொணரும் பகுதி அது. மகிழ்ச்சி தரும், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி தமாசுகள் முத்தானவை. பள்ளி நாட்களுக்கு அழைத்து செல்லும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி இளமைப் பருவத்தை நினைவுபடுத்தி மனதை குதுாகலமாக்குகிறது.

வித்தியாசமான சுவையை வழங்கும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி பற்றி கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு பகுதியும் மனதை கவர்வதால், அனைத்து வயதினரின் அபிமானத்துக்கு உரியதாக விளங்குகிறது, சிறுவர்மலர்!

- எஸ்.மைதிலி, சென்னை.

தொடர்புக்கு: 93825 65351


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us