
என் வயது, 48; பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன். பள்ளி பருவம் துவங்கி, சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படிக்கிறேன். சிறுவயதில், நண்பன் கோபியும், நானும், ஓவியங்கள் வரைந்து, அனுப்பி வைப்போம். நண்பன் ஓவியம் மட்டும் சிறுவர்மலர் இதழில் இடம் பெற்றிருந்தது; அதனால், சற்று கோபம் இருந்தது.
பணியில் சேர்ந்த பின், மாணவ, மாணவியரின் ஓவியங்களை அனுப்பி வைக்க உதவுகிறேன். யாவும், சிறுவர்மலர் இதழில் இடம் பெற்று வருவதால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இளமை நினைவை அசைபோட வைக்கிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. புதுமையை கையாண்டு, நீதியை எடுத்து கூறுகின்றன சிறுகதைகள். அவை புராணமாக மட்டும் இல்லாமல், புதுமையாகவும் இருப்பதால், விரும்பி படிக்கின்றனர் மாணவர்கள்.
அலைபேசி, இணையதளம், 'டிவி' என தொடர்பு சாதனமாக எது வந்த போதிலும், சிறுவர்மலர் இதழ் வாசம், காலத்துக்கு ஏற்ப புதுமையுடன் வீசுகிறது. அது, மேலும் வளர வாழ்த்துகிறேன்!
- அரசடி செல்லம் வீரசேகர், விருதுநகர்.
தொடர்புக்கு: 99940 15523