PUBLISHED ON : ஏப் 29, 2016

இந்த வாரம் நாம் சந்திக்கப்போகிற பொன்னான வாசகர் பெயர் டி.எம்.பத்மநாபன்; வயது 80. நாற்பது வருடங்களாக தினமலர் வாசகர். 1961ம் ஆண்டில் தலைமன்னாரில் இருந்து இலங்கைக்கு கப்பல் விட்டிருந்தனர். அதில் பயணம் செய்த அனுபவத்தை தினமலர் இதழில் கட்டுரையாக எழுதியிருந்தார். ஆனால், இவருடைய புகைப் படம் மாறி வெளியாகிவிட்டது. அதில் இவருக்கு மிகுந்த வருத்தம். இவரை கவுரவித்து புகைப்படத்தை எடுத்து வெளியிடப் போகிறோம் என்று சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டார்.
'அன்றிலிருந்து இன்றுவரை சுவை குறையாமல், மெருகு ஏறிக்கொண்டே செல்வது சிறுவர்மலர் இதழின் சிறப்பு. என்னுடைய பேரப் பிள்ளைகள் புதிர்பகுதி, அங்குராசு, உங்கள் பக்கம் இவற்றை மிகவும் விரும்புவர். புதிதாக வந்துள்ள எல்லா போட்டிகளிலும் பங்குபெற்று பரிசு வாங்க ஆசைப்படுகிறேன். குழந்தையின் உற்சாகத்துடன் சிறுவர்மலர் இதழை நேசிக்கும் நானும் ஒரு சிறுவன் தான்!' என்றார்.
தீர்க்காயுசுடன் வாழ சிறுவர்மலர் இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்!