PUBLISHED ON : மார் 01, 2025

என் வயது, 51; துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம், ராமனுாத்து ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறேன். அண்மையில் பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. மேடை பேச்சு புதிது என்பதால், எவ்வளவோ மறுத்தும் ஏற்பாடு செய்தவர் விடுவதாக இல்லை.
வேறு வழியின்றி படித்த கதைகள், அனுபவ மொழிகள், மொக்க ஜோக்ஸ் கலந்து பேசி, பாராட்டு, கை தட்டலை பெற்றேன். மற்ற நிகழ்வுகள் தொடர, கையில் வைத்திருந்த சிறுவர்மலர் இதழை வாசிக்க துவங்கினேன். இதை கவனித்த சக ஆசிரியர், 'ஐம்பது வயதை கடந்து விட்டாய்... இன்னுமா சிறுவர்மலர் இதழை படிக்கிறாய்...' என்று கேட்டார்.
நிதானம் குறையால், 'இதை சாதாரண காகிதத்தால் ஆன புத்தகம் என எண்ணாதே... இப்போது மோடையில் பேசி பாராட்டை பெற்றேனே... அதற்கு இந்த சிறுவர்மலர் தான் காரணம்...' என்று சொன்னேன். தலை குனிந்து நின்றார் நண்பர். வயது கடந்து கொண்டிருக்கிறது; அனுபவங்களை பெற்று வருகிறேன். இவற்றுடன் மகிழ்வு கொள்ளும் வகையில், சிறுவர்மலர் இதழோடு என் வாசிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதை எங்கேயும், எப்போதும் பெருமைக்குரியதாக சொல்ல தயங்கியதில்லை.
- மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி.
தொடர்புக்கு: 9442885667