
என் வயது, 74; தனியார் பேருந்து நிறுவனத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வயது வித்தியாசமின்றி எல்லாரும் விரும்பி படிக்கும் வாடா மலராக உள்ளது.
பள்ளி மாணவப் பருவ நிகழ்வுகளை மனத்திரையில் ஓடவிட்டு மகிழ்விக்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்களை வாசிக்கும் போது உணர்வு பெருக்கு ஏற்படுகிறது. கதையும், காட்சியுமாக சித்திரக்கதை வித்தியாச அனுபவம் தருகிறது. நீதியை போதிக்கிறது சிறுகதை. அடுத்தடுத்து எதிர்பார்க்க வைக்கிறது தொடர்கதை.
இவை மட்டுமின்றி புத்தியை கூர்மைப்படுத்தும் புதிர் போட்டி பொழுதை பயனுள்ளதாக்குகிறது. சிறுவர், சிறுமியருக்கு ஓவியம் வரையும் ஆர்வத்தை துாண்டும், 'உங்கள் பக்கம்!' வண்ணமயமாக திகழ்கிறது. மழலையரின் எழில்மிகு தோற்றத்தை தந்து, 'குட்டி குட்டி மலர்கள்!' பரவசமடைய வைக்கிறது.
இக்கட்டில் தவிப்போருக்கு நல்வழிகாட்டியாய், 'இளஸ் மனஸ்!' விளங்குகிறது. இன்னும் பல அம்சங்களின் பெட்டகமாக திகிழ்கிறது. சேவைமிகு செய்திகளை தரும் சிறுவர்மலர் இதழின் மங்காத புகழ் தொடர மனதார வாழ்த்துகிறேன்.
- வி.வரதராஜன், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 90944 37922

