
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 50; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை தவறாமல் வாசிக்கிறேன். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பேன். சிறுவர்மலர் இதழில், 'இளஸ் மனஸ்!' மிகவும் பிடித்தமான பகுதியாக உள்ளது.
என் பேரன் வரைந்த ஓவியத்தை, 'உங்கள் பக்கம்!' பகுதிக்கு அனுப்பி வைத்தேன். அது வெளியானதும் குடும்பத்தினர் அகம் குளிர மகிழ்ச்சி அடைந்தோம். என் பேரன் புகைப்படம், 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியிலும் பிரசுரமாகியுள்ளது. சிறுவர், சிறுமியருக்கு மட்டுமல்ல இந்த இதழ். என் போன்ற வயதுள்ளோரும் விரும்பிப் படிக்கும் வகையில் சிறுவர்மலர் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
- ந.காமாட்சி, ராஜபாளையம்.
தொடர்புக்கு: 97882 27538

