PUBLISHED ON : ஆக 15, 2020

அ நிறம் | அளவு
பெரிய கட்டடம், பாலங்களை கட்டும் தொழிலாளர்கள், மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் வண்ண சீருடை அணிவதை பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணத்தை பார்ப்போம்.
உலகின் பெரும்பாலான நாடுகள், இந்த முறையில் தான் தொழிலாளர்களை சீருடை அணிய அறிவுறுத்துகின்றன. இதற்கு, 'கை விசிபிலிடி சேப்டி ஆப்பாரல்' என்று பெயர். சுருக்கமாக எச்.வி.எஸ்.எ., என்பர்.
கட்டுமான இடத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் பாதுகாப்பு வசதிகள் மிக முக்கியமானது. அதை கருத்தில் கொண்டே இந்த வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. துாரத்தில் இருந்தாலும் ஆரஞ்ச், மஞ்சள் வண்ணங்களை சுலபமாக பிரித்து அறியலாம்.
சாதாரண வெளிச்சத்திலும், சட்டென கவனத்தை ஈர்க்கும். வேலை நடக்கும் விவரத்தை எளிதாக, பொதுமக்கள் அறியும் வகையில் இந்த நிறங்கள் உதவுகின்றன.
- எம்.எஸ்.அபிஷேக்
