PUBLISHED ON : ஆக 01, 2014

வெந்நீர் நீருற்றுகள்-ஆவி பறக்கும் தண்ணீர் பெரும்பாலும் தாதுக்கள் அல்லது பாசியால் லேசான சிவப்பு, மஞ்சள், பச்சை அல்லது நீல வண்ணத்தில் காணப்படும். இவை கெய்சர் (வெந்நீர் வைக்கும் கருவி) போலவே செயல்படுகிறது. குளிர்வான மழை நீர், பாறைகள் வழியாக துளி, துளியாக ஒழுக, அவை எரிமலை குழம்பால் உஷ்ணப்படுத்தப்படுகிறது.
இந்த சூடான தண்ணீர் தாதுக்களையும், மற்ற சேர்மானங்களையும் தன்னுள் உள்வாங்கியபடி தரைமட்டத்திலிருந்து பீறிட்டு வெளிவருகிறது. பூமியின் கீரல் அல்லது வெடிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து சூடான குமிழிகளாய் மெது மெதுவாய் வெளிவந்து ஊற்றாய் உருமாறுகிறது.
தண்ணீர் உள்வாங்கிய தாதுக்களும், பிற சேர்மானங்களும் தண்ணீரின் மேலேயே படிந்து ஊற்றின் விளிம்பாய் அமைந்து விடுகிறது. இந்த புவி சார் வெப்ப ஊற்றுகள் வெப்ப நிலையில் மாறுபட்டாலும், பெரும்பாலான வெப்ப நீரூற்றுகள் முட்டையை வேக வைக்க கூடியதாக இருக்கும்.
உஷ்ணப்பகுதி படங்கள்!
உலகம் முழுவதும் புவிசார் வெப்ப நீரூற்றுகள் அனைத்தும் எரிமலைகளின் அருகே காணப்படுகின்றன. வெப்ப நீரூற்றுகளும், எரிமலைகளும் நில மேல் மட்ட அமைப்பை ஒட்டியே காணப்படுகின்றன. அங்கே மோதும் அல்லது விலகிப் போகும் பூமி அடுக்குகள் பூமிக்கு அடியே இருக்கும் எரிமலையை ஆழத்திலிருந்து மேலே பொங்கி வரச் செய்கிறது.
இந்த எரிமலை குழம்பு எரிமலைகள் மூலம் வெளிவருகிறது. அதனால், வெளியேறும் அதீத வெப்பம், வெப்ப நீரூற்றுகளை உருவாக்குகிறது. எரிமலைகள் மற்றும் வெப்ப நீரூற்றுகள் புவியின் மத்திய அடுக்குப்பகுதியான ஹவாயிலும் ஏற்படுகிறது.
எரிமலை வெப்ப நீரூற்று!
பெரும்பாலான வெப்ப நீருற்றுகள் எரிமலை குழம்பின் அருகாமையில் அமைகிறது. முதலில், மழைநீர் பாறை வெடிப்பு கள், துளைகள் வழியாக கசிந்து துளையில்லாத பூமியின் அடுக்கு பகுதியை அடைய அங்கே தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அதன் அடியே இருக்கும் எரிமலை குழம்பு தண்ணீரை சூடாக்குகிறது. இதனால், அந்த தண்ணீர் மேல் மட்டத்திற்கு உந்தப்பட்டு வெப்ப நீரூற்றாக வெளிப்படுகிறது.
எரிமலை சாராத வெப்ப நீரூற்று!
சில சமயம், எரிமலைக்கு சற்றும் தொடர்பு இல்லாத வெகு தூர இடத்திலும் வெப்ப நீரூற்றுகள் வெளியே கிளம்பும். எரிமலை சாராத வெப்ப நீரூற்றுகளின் வெளி கிளம்பலுக்கு தேவையான வெப்பம் மற்றைய வழிகளான இயற்கையான கதிர் இயக்க தனிமங்களாலும், பக்க வாட்டில் உராய்ந்து கொண்டபடி கீழே விழும் பாறை அடுக்கு களாலும், தொன்மையான எரிமலை குழம்பு சேகரம் ஆகி இருக்கும் வெப்பத்தாலும் கிடைக்கப் பெறுகிறது.
