தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/பிப்ரவரி - 2013

பிப்ரவரி - 2013

பிப்ரவரி - 2013


PUBLISHED ON : டிச 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்

பிப்., 7: சட்டசபையில் தே.மு.தி.க., வில் இருந்து பிரிந்து சென்ற மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ.,வுக்கும், மற்ற சில தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே கைகலப்பு.

பிப்., 8: சென்னை ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக ராஜேஸ் அகர்வால் பொறுப்பேற்பு.

பிப்., 12: மறுத்தது குற்றமா: 2012,நவ., 14ல் புதுச்சேரி சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி மீது, காதலிக்க மறுத்ததற்காக சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார். பலத்த காயமடைந்த வினோதினி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பலர் இவருக்கு உதவினர். இருப்பினும் பிப்., 12ல் வினோதினி உயிரிழந்தார். குற்றவாளி சுரேஷ்க்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அக்., 5ல் வினோதினி தாயாரும் தற்கொலை செய்தார்.

பிப்., 13: 1993ல் கன்னிவெடி தாக்குதல் நடத்தி 22 போலீசாரை கொன்ற வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை கருணை மனு நிராகரிப்பு. மரணதண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை.

பிப்., 20: இலங்கை இறுதிக்கட்ட போரில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட படத்தை 'சேனல் 4' வெளியிட்டது.

பிப்., 27: தமிழக அமைச்சர்கள் விஜய், கோகுல இந்திரா, சிவபதி ஆகிய மூவரும் அமைச்சரவையில் இருந்து நீக்கம். அவர்களுக்குப் பதிலாக பூனாட்சி, வைகைசெல்வன், கே.சி.வீரமணி ஆகியோர் அமைச்சர்களாக நியமனம்.

இந்தியா

பிப்., 1: விபத்து மற்றும் கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், சட்டம், வழக்கு குறித்து கவலைப்பட தேவையில்லை என டில்லி ஐகோர்ட் உத்தரவு.

பிப்.6: சமூக பாதுகாப்பு உடன்படிக்கையில் இந்தியா, ஆஸ்திரியா நாடுகள் வியன்னாவில் கையெழுத்து.

பிப்., 7: வரும் 2020ம் ஆண்டில் பாதுகாப்பு துறைக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடிக்கும் என ஆய்வில் தகவல்.

பிப்., 8: இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின், இந்திய வருகையை கண்டித்து டில்லி மற்றும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம்.

பிப்., 9: பார்லிமென்டின் பரிதாபம் : 2001 டிச., 13ல் இந்திய பார்லிமென்ட் வளாகத்துக்குள் உச்சக்கட்ட பாதுகாப்பையும் மீறி, லக்ஷர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாதிகள் 5 பேர் புகுந்தனர். கண்மூடித்தனமான தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். போலீசாரின் பதிலடியில், 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவுக்கு 2003ல் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் இவரது கருணை கிடப்பில் கிடந்ததால், 10 ஆண்டுகள் கழித்து பிப்., 9ல் தூக்கிலிடப்பட்டார்.

பிப்., 14: பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டு, 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார்.

பிப்., 17: நிறுத்த முடியாத பயங்கரவாதம்: ஐதராபாத்தின் தில்சுக் நகரில், பிப்., 21 இரவு 7 மணிக்கு, மக்கள் கூட்டம் நிறைந்த வணிக வளாகத்தில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததில் 17 பேர் பலி. 119 பேர் காயம்.

பிப்., 19: சாகித்ய அகாடமியின் தலைவராக விஸ்வநாத் பிரசாத் நியமனம்.

பிப்., 21: எர்னஸ்ட் அண்டு யங் வழங்கும், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது.

பிப்., 22: நாட்டில் புதிதாக வங்கிகள் தொடங்குவதற்கான புதிய வழிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

* இன்ஸ்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி அமைப்பின் (ஐ.ஆர்.டி.ஏ.,) புதிய தலைவராக டி.எஸ்.விஜயன் பொறுப்பேற்பு.

பிப்., 23: பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி பிளேட் அண்டு வெசில்ஸ் (பி.எச்.பி.வி), பெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்பதல்.

பிப்., 25: பி.எஸ்.எல்.வி., - சி20 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய - பிரான்ஸ் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட சரல் செயற்கைக்கோள் மற்றும் கனடா (2), ஆஸ்திரியா (2), டென்மார்க் (1) மற்றும் இங்கிலாந்து (1) நாடுகளின் செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்டன.

பிப்., 28: 2013ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்தார். இது இவரது 8வது பட்ஜெட்.

உலகம்

பிப்., 1: பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள ஹங்கு என்ற இடத்தில் மசூதிக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலி.

* சீனாவில் நடந்த வெடிவிபத்தில் 33 பேர் பலி.

* செக்குடியரசில் முதல்முறையாக நேரடி பிரதமர் தேர்தல் நடந்தது.

பிப்., 2: அமெரிக்காவின் வெளியுறவுதுறை செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு பதிலாக, ஜான் கெர்ரி என்பவர் நியமனம்.

பிப்., 4: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மோ யான் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரம் ஜாக்கி சான் ஆகியோர் சீன பார்லிமென்ட் உறுப்பினர்களாக தேர்வு.

பிப்., 11: கனடா விண்வெளி வீரரான கிறிஸ் ஹேட்பீல்டு, சர்வதே விண்வெளி நிலையத்தில் இருந்து பாடிய பாடல் இணையதளத்தில் வெளியானது.

* விண்வெளி மையத்தில் அவர் பாடிய பாடல், கனடாவில் உள்ள ரெக்கார்டிங் ரூமில், அவரது நண்பர் எட் ராபர்ட்சனும் இணைந்து பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்டது. உலகில் விண்வெளியில் பாடல் பாடி வெளியானது இதுவே முதல்முறை.

பிப்., 12: வடகொரியா மூன்றாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

பிப்., 18: முதன் முறையாக மன்னிப்பு: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். பிப்., 18ம் தேதி, 1919ல் ஆங்கிலேயர் ஆட்சியில், 'ஜாலியன் வாலாபாக் படுகொலை' நடந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது இங்கிலாந்து சார்பாக அச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். சம்பவம் நடந்து 94 ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்து ஆட்சியாளர் ஒருவர் மன்னிப்பு கேட்பது இதுவே முதல்முறை.

பிப்., 28: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படும் போப், 16வது பெனடிக்ட் ராஜினாமா செய்தார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஒருவர் பதவியை ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை.

பிப்., 25: 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் அதிகபட்சமாக 'லைப் ஆப் பை' என்ற படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தன. சிறந்த திரைப்படமாக அர்கோ தேர்வானது. லிங்கன் திரைப்படம் 12 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பிப்., 26: தென்கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் ஷியன்-ஹை என்பவர் பதவியேற்பு.

பிப்., 28: சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபராக நிகோஸ் அனாஸ்டாசியாடஸ் பொறுப்பேற்பு.

'நியூஸ் ரேங்க்'

1. கட்டாயம்: காவிரி நடுவர் நீதிமன்றம், 2007ல் வெளியிட்ட இறுதி தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மத்திய அரசின் அரசிதழில் பிப்., 5ல், வெளியிடப்பட்டது. இனி கர்நாடகம், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 419 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.

2. மூன்று மாநில தேர்தல்: திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் பிப்., 28ல் வெளியிடப்பட்டன. திரிபுராவில் மார்க்சிஸ்ட், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி, மேகாலயாவில் காங்., ஆட்சியைப் பிடித்தன.

3. அமைச்சரே இப்படியா : மற்றவருடைய ஆய்வுக்கட்டுரையை காப்பியடித்து, பிஎச்.டி., பட்டம் பெற்ற ஜெர்மன் பெண் கல்வி அமைச்சர் அனிடி ஸ்கெவனுக்கு எதிர்ப்பு. இதையடுத்து பிப்., 12ல் பதவியில் இருந்து ராஜினாமா.

விளையாட்டு

பிப். 6: கொச்சியில் நடந்த பாலஸ்தீன அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி.

பிப். 8: 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் சதம் அடித்த மும்பை அணியின் சச்சின், முதல் தர போட்டியில் அதிக சதம் (81) அடித்த கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.

பிப். 14: வேல்ஸ் ஓபன் ஸ்னூக்கர் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் பங்கஜ் அத்வானி.

* 'ஆபத்தான' ஆஸ்கர்: தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஆஸ்கர் பிஸ்டோரியஸ். இரு செயற்கை கால் பொருத்தி ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் 400, 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார். இவரது வாழ்வில் திடீரென சோதனை ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில்

வீட்டில் புகுந்த இவரது காதலி ரீவா ஸ்டீவன்கெம்ப்பை, திருடன் என நினைத்து சுட்டுக் கொன்றார். இதனால் கைது செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

பிப். 17: பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் பைனலில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய ஆஸ்திரேலியா, 6வது முறையாக சாம்பியன்.

பிப். 18: ஜெர்மனியில் நடந்த கிரென்கே கிளாசிக் செஸ் தொடரில், 6.5 புள்ளிகள் பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிப். 22: சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற 'சுழல் மன்னன்' ஹர்பஜன் சிங், 100 டெஸ்டில் விளையாடிய 10வது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

பிப். 23: துபாய் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மேடக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

பிப். 24: பிரான்சில் நடந்த மார்செல்லி ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் போபண்ணா, இங்கிலாந்தின் கோலின் ஜோடி சாம்பியன்.

பிப். 25: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் 224 ரன்கள் எடுத்த தோனி, அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சச்சினை (217 ரன்கள், எதிர்-நியூசி., 1999, ஆமதாபாத்) முந்தி, முதலிடம் பிடித்தார்.

பிப். 26: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us