PUBLISHED ON : டிச 29, 2013

தமிழகம்
மார்ச் 8: போராட்டத்தில் மாணவர்கள்: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கோரி, மார்ச் 8ல் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பரவியது.
மார்ச் 15: இலங்கையில் தனித் தமிழ் ஈழம், அமைய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அனைத்து கல்லூரிகளும் காலவரையின்றி மூடல்.
மார்ச் 19: தி.மு.க., விலகல்: இலங்கை பிரச்னை தொடர்பாக தி.மு.க., வின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும், மார்ச் 19ல், தி.மு.க., விலகியது. இதையடுத்து தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்த அழகிரி, நெப்போலியன், காந்திசெல்வன், பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன் ஆகிய ஐந்து பேரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
மார்ச் 20: ஈரோடு அருகேயுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்தின் 4வது புலிகள் காப்பகம்.
மார்ச் 25: தே.மு.தி.க., போட்டி எம்.எல்.ஏ.,க்களுடன் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பாக, அக்கட்சி கொறடா சந்திரக்குமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, முருகேசன், செந்தில்குமார், பாலஅருட்செல்வன் ஆகிய ஆறு பேர், ஆறு மாதம் சஸ்பெண்ட்.
மார்ச் 27: 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கும், இனப் படுகொலைக்கும், சர்வதேச விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும். தனி ஈழத்துக்கு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
இந்தியா
மார்ச்1: இந்திய ரயில்வேயின் ஐ.ஆர். சி.டி.சி., இணையதளம் மூலம் ஒரே நாளில் 5.02 லட்சம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து சாதனை. இதற்கு முன் 4.96 லட்சம் என்பதே அதிகமாக இருந்தது.
மார்ச் 3: இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூன்று நாள் பயணமாக வங்கதேசம் சென்றார். 1974க்குப் பின், இந்திய ஜனாதிபதி ஒருவர் வங்கதேசம் செல்வது இதுவே முதல் முறை. மேலும் பிரணாப் முகர்ஜியின் முதல் வெளிநாட்டுப்பயணமாகவும் அமைந்தது.
மார்ச் 5: நாகாலாந்து முதல்வராக, நாகா மக்கள் முன்னணி சார்பில் தொடர்ந்து 3வது முறையாக, நெய்பு ரியோ பதவியேற்றார். 60 இடங்களுக்கு நடந்த தேர்தலில், 40 இடங்களில் வெற்றி பெற்றது.
மார்ச் 12: கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமினில் சென்ற இரண்டு இத்தாலி கடற்படை வீரர்கள், திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என இத்தாலி அரசு அறிவிப்பு. இந்தியா கடும் கண்டனம். இதையடுத்து மார்ச் 22ல் 2 மாலுமிகளும் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
மார்ச் 13: நாட்டில் முதன் முதலாக முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் அஞ்சல் நிலையம், டில்லி சாஸ்திரி பவனில் தொடக்கம்.
மார்ச் 19: ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும், இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவரை, நீக்க அரசுக்கு அதிகாரமளிக்கும் சட்டத் திருத்த மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல்.
மார்ச் 20: கோவாவில் இருந்து மும்பை வந்த சொகுசு பஸ், ரத்னகிரி ஆற்று பாலத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலி.
மார்ச் 21: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து, ஐ.நா., மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி. இந்தியா ஆதரவு. எனினும் தீர்மானம் பலனில்லாத ஒன்றாகி விட்டது.
* ஜெயிலில் நடிகர்: 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளுக்கு பின், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில், யாகுப் மேமன், அவரது சகோரர் டைகர் மேமன் ஆகியோரின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மீதி 10 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு. ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 20 பேரில், 16 பேரின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆண்டுகளாக குறைப்பு. இதையடுத்து இவர் திகார் சிறையில் அடைப்பு.
உலகம்
மார்ச் 1: வங்கதேசத்தில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சியின் துணை தலைவர் ஹுசைன் சயீதிக்கு, மரண தண்டனை அறிவிக்கப்பட்டதை கண்டித்து நடந்த வன்முறையில், 60 பேர் பலி. 1971ல், நடந்த சண்டையின் போது, வீடுகளை கொளுத்தியதாகவும், பலரை கொன்று, பொருட்களை கொள்ளையடித்ததாகவும், இவர் மீது வழக்கு பதிவானது.
மார்ச் 5: மாலத்தீவின்,'மாஜி' அதிபர் முகமது நஷீத், கைதானார். அதிபராக இருந்த போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவானது.
மார்ச் 6: கம்யூனிச நாடான வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸ்,
புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். 1998லிருந்து தொடர்ந்து 14 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த இவர், அமெரிக்காவை கடுமையாக எதிர்த்தார்.இவருக்கு பதிலாக நிகோலஸ் மதுரோ புதிய அதிபரானார்.
மார்ச் 13: உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி, சிலி நாட்டில் அமைக்கப்பட்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரம் கொண்டது.
* புதிய 'போப்': 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் புதிய 'போப்' ஆக அர்ஜென்டினாவின் ஜார்ஜ் மரியோ மார்ச் 13ல் பொறுப் பேற்றார். இவர் 'போப் பிரான்சிஸ்' என அழைக் கப்படுகிறார். முன்னதாக உடல்நிலை காரணமாக போப், 16வது பெனடிக்ட், பிப்., 28ல் ராஜினாமா செய்தார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஒருவர் பதவியை ராஜினாமா செய்தது இதுவே முதல் முறை.
மார்ச் 15: சீனாவின் புதிய பிரதமராக லீ கெகியாங் பொறுப்பேற்பு.
மார்ச் 16: பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. சுதந்திரத்துக்குப்பின், முதல் முறையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது.
மார்ச் 20: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, சிகிச்சைக்குப்பின், பிரிட்டனில் உள்ள 'எட்க்பாஸ்டன்' பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், தன் படிப்பை தொடர்ந்தார்.
மார்ச் 24: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், 5 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பினார்.
மார்ச் 27: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் பங்கேற்ற 'பிரிக்ஸ் - 2013' மாநாடு, தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடந்தது.
மார்ச் 28: தலிபான்களால் சுடப்பட்டு, உயிர்பிழைத்த சிறுமி மலாலாவின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக வெளியிட 16 கோடி ரூபாய்க்கு பிரிட்டன் நிறுவனம் ஒப்பந்தம் நிறைவேற்றம்.
'நியூஸ் ரேங்க்'
1. மாணவர்களுக்கு ஏமாற்றம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மார்ச் 13ல் புதிய தலைவராக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த நவநீதகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.
2. 'மது'வுக்கு தடை சாத்தியமா: தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, 33 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, காந்தியவாதி சசிபெருமாள், மார்ச் 4ல் உண்ணாவிரதத்தை முடித்தார்.
3. தமிழக வீரர் பலி: காஷ்மீர் ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப்., முகாமில், திடீரென்று புகுந்து பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி. இதில் மதுரையை சேர்ந்த வீரரும் ஒருவர்.
விளையாட்டு
மார்ச் 2: துபாய், டென்னிஸ் தொடரில், இந்தியாவின் பூபதி, பிரான்சின் மைக்கேல் லோட்ரா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
மார்ச் 3: கொச்சியில் நடந்த சந்தோஷ் டிராபி கால்பந்து பைனலில், சர்வீசஸ் அணி, கேரளாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.
மார்ச் 5: டெஸ்டில் முதல்வன்: கிரிக்கெட் அரங்கில் தோனியின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் கங்குலியை (21 வெற்றி) பின்தள்ளி முதலிடம் பிடித்தார் தோனி (22 வெற்றி).
மார்ச் 12: உலகின் தலைசிறந்த வீரருக்கான லாரஸ் விருதை, ஜமைக்காவின் உசைன் போல்ட் வென்றார்.
மார்ச் 16: தவான் மின்னல் சதம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ஷிகர் தவான் 85 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் 136 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில், அறிமுக போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.
மார்ச் 17: மலேசியாவில் நடந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 5வது இடம் பிடித்தது.
