/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
750 நாய்களுக்கு படியளக்கும் வித்தியாசமான இளைஞர்!
/
750 நாய்களுக்கு படியளக்கும் வித்தியாசமான இளைஞர்!
PUBLISHED ON : ஜூன் 28, 2020

ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள நிஸ் என்ற நகரில் வசிக்கிறார், சாஹா பெசிக் என்ற இளைஞர். தெருக்களில் அனாதையாக விடப்படும் நாய்களை துாக்கி வந்து, உணவு கொடுத்து, அவற்றை பராமரித்து வளர்ப்பது தான், இவரது வேலை. தற்போது இவர், 750க்கும் அதிகமான நாய்களை வளர்க்கிறார்.
இந்த நாய்களுக்கு உணவுக்காக மட்டும், மாதத்துக்கு, 10 லட்சம் ரூபாய் செலவாகிறதாம். இதை தவிர, பராமரிப்பு செலவு தனி. வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பும் நன்கொடை மூலம் செலவை சமாளிப்பதாகவும், ஆத்ம திருப்திக்காக இந்த சேவையை செய்வதாகவும் கூறுகிறார்.
செர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு ரூபாய் கூட, இவருக்கு நன்கொடை தருவது இல்லை. நன்கொடை, சேவை போன்ற விஷயங்களில், அவர்களுக்கு நம்பிக்கையில்லையாம்.
— ஜோல்னாபையன்

