தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வருகிறது அழகர் குதிரை!

வருகிறது அழகர் குதிரை!

வருகிறது அழகர் குதிரை!


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 14 - சித்ரா பவுர்ணமி

சித்ரா பவுர்ணமியன்று, மதுரையில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏன் இவ்விழாவை, இந்த நாளில் தேர்ந்தெடுத்தனர் தெரியுமா?

சித்திரை பவுர்ணமியில், நிலவின் முழு கதிர்களும், உலகத்தின் மேல் படுகிறது. இதன் காரணமாக, மன ஒருமைப்பாடு அதிகரிக்கிறது. நவக்கிரகங்களில், சந்திரனே மக்களுக்கு மனபலத்தை அளிப்பவர். இவரை ஜோதிடத்தில், மனோகாரகன் என்பர்.

இதனால் தான், அக்காலத்தில், சித்ரா பவுர்ணமியன்று, புதுமணத் தம்பதிகள் நதிக்கரைகளில், சித்ரான்ன வகைகளுடன் கூடி மகிழ்ந்தனர். அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ, இந்த சந்திரன் உதவியிருக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த நாளில், அழகர் அதிகாலையில், குதிரை வாகனத்தின் மீது ஏறி, வைகையாற்றில் இறங்குகிறார். இக்குதிரையின் நான்கு கால்களும், அறம், பொருள், இன்பம், வீடுபேறு (மோட்சம்) போன்றவற்றை குறிக்கிறது.

தர்மப்படி பொருள் சேர்த்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும். இன்பவாழ்வு வாழ்பவன், பொருளின் நிலையற்ற தன்மையை அறிந்து, இறைவனின் திருவடியை அடைவான் என்பதை, இந்தக் கால்கள் உணர்த்துகின்றன

குதிரையின் காதுகளை கர்மகாண்டம், ஞானகாண்டம் என்று சொல்வர். கர்மம் என்றால், பணி. எவன் ஒருவன், தன் ஆன்மிகப் பணியை (அன்றாட வழிபாடு) தவறாமல் செய்து வருகிறானோ, அவனுக்கு, 'இந்த உலக வாழ்வு தற்காலிகமானது...' என்ற, ஞானம் கிடைத்து விடும்.

குதிரையின் கண்களை, அபர ஞானம் என்றும் பர ஞானம் என்று சொல்வர். இளமையில், உலக இன்பங்களை பெரிதாக நினைக்கும் நமக்கு, காலம் போகப் போக, கடவுளே பெரிதென்ற ஞானம் வந்து விடுகிறது. 'ஏன்...முதுமை வரை காத்திருக்க வேண்டும். இப்போதே பரஞானம் என்னும் கடவுளைப் பற்றிய அறிவை, பெற்றுக் கொள்ள வேண்டியது தானே... அதற்காகத்தானே கூரிய பார்வையுடைய கண்கள் உனக்கு தரப்பட்டிருக்கின்றன...' என்கிறார் அழகர்.

குதிரையின் முதுகு, பிரபஞ்சமாகிய இந்த உலகத்தைக் குறிக்கிறது. உலகம் என்றால் பூலோகம் மட்டுமல்ல, சகல உலகங்களும் தனக்கு கட்டுப்பட்டவை என்பதால், அழகர் அதன் மேல் அமர்ந்திருக்கிறார். திறமை படைத்த வீரன் செலுத்தும் குதிரை, செல்ல வேண்டிய இடத்தைச் சரியாக சென்றடைவது போல, மனக்குதிரையை அடக்கி, சரியான வழியில் செலுத்துபவன், வாழ்வில் வெற்றி பெறுவான் என்பதை, அழகரின் குதிரை வாகனம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

எனவே, அழகரின் தங்கக் குதிரையின் அழகை மட்டும் ரசித்து வராமல், அர்த்தம் புரிந்து அவரை தரிசிப்போம். அவரது திருவடி நிழலில் வாழும் பேறு பெறுவோம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us