தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு!

நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு!

நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு!


PUBLISHED ON : ஏப் 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முத்தம். இனிமையான விஷயம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான விஷயமும் கூட. தாய், குழந்தையின் கன்னத்தில் கொடுக்கும் முத்தம், தாய்மையின் வெளிப்பாடு. பெரியவர்கள், சிறியவர்களுக்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம், பாசத்தின் வெளிப்பாடு. காதலன், காதலிக்கு இதழ்களில் கொடுக்கும் முத்தம், காதலின் வெளிப்பாடு.

வெளிநாடுகளில்,பொது இடங்களில் காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வது, டீ, காபி சாப்பிடுவது மாதிரி, சர்வ சாதாரணமான விஷயம். நம் நாட்டில் இது@வ மிகவும் அரிதான விஷயம்; 'அதெல்லாம் திருமணத்துக்கு பின் பார்த்துக் கொள்ளலாம்...' என்ற காதலியின் நழுவலான பதில், காதலனின் முத்த ஆசைக்கு மொத்தமாக முற்றுப் புள்ளி வைத்து விடும். முத்தமிடலுக்கு வாய்ப்பு கிடைக்காத காதலர்களும் உண்டு.

எந்த ஒரு விஷயத்தையுமே, வித்தியாசமாகவும், புதுமையாகவும் செய்ய வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்துடன் செயல்படும் சீனர்கள், முத்தமிடும் விஷயத்தை மட்டும் விட்டு வைப்பரா? அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஹெபி என்ற நகரத்தில், காதலர்களின் முத்தமிடும் போட்டிக்கு, ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதழ்களுடன் இதழ்கள் சேர்த்தபடி, நீண்ட நேரம் முத்தமிடும் ஜோடிக்கு பரிசு தரப்படும் என, அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் கூடும், திறந்த வெளியில், இந்த இளமையான போட்டி நடந்தது. ஹெபி நகரத்தை சேர்ந்த, 50 காதல் ஜோடிகள், இதில் பங்கேற்றனர். அவர்களின் முகங்களில், ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை காண முடிந்தது. விசில் ஊதப்பட்டதும், ஒவ்வொரு ஜோடியும், தங்களின் இணைகளின் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட்டனர்.

முத்தமிடுவதில், ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றினர். ஒருவர், தன் காதலியை மடியில் சாய்த்தபடி முத்தமிட்டார். மற்றொருவர், காதலியை இடுப்பில் அமரவைத்தபடி முத்தமிட்டார். இன்னுமொருவர், காதலியை தலைகீழாக தூக்கி வைத்துக் கொண்டு முத்தமிட்டார். ஆனாலும், எவ்வளவு நேரம் தான், உதட்டை எடுக்காமல் முத்தமிட்டுக் கொண்டிருப்பது? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. இதில் முத்தத்துக்கு மட்டும் விதி விலக்கா என்ன?

சில நிமிடங்களிலேயே, சில காதலர்களுக்கு உதடு வலிக்க ஆரம்பித்தது. இதனால், போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். மேலும், சிலரது முத்த போட்டி, அரை மணி நேரம் வரை நீண்டது. மயக்கம் வருவது போல் தெரிந்ததால், 'இதற்கு மேல் தாங்காது' என, அவர்களும் வெளியேறினர். ஒரு சில காதலிகள், மயக்கம் போட்டு கீழேயே விழுந்தனர். அவர்களை கைத்தாங்கலாக, ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தது, தனிக் கதை.

கடைசியாக, ஒரே ஒரு காதல் ஜோடி மட்டும் இரண்டு மணி நேரம், 43 நிமிடங்கள், <உதட்டுடன் உதடு எடுக்காமல் தொடர்ந்து, 'மாரத்தான் முத்தமிட்டு' சாதித்துக் காட்டியது. அந்த காதல் ஜோடிக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் பரிசளிக்கப்பட்டது. கரும்பு தின்னக் கூலி கொடுத்த கதையாக இருக்கிறதல்லவா?

***

எஸ். ரேவதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us