PUBLISHED ON : ஏப் 10, 2022

அ நிறம் | அளவு
தமிழக - கேரளா எல்லை கிராமமான, நாளிதன்புத்துாரில், பெருமாள்சாமி என்பவருடைய வீட்டில் உள்ள நாய், ஆறு குட்டிகளை போட்டது. அத்தனையையும் உறவினர்கள் அள்ளி சென்று விட்டனர். பாலை புகட்ட குட்டிகள் இல்லாமல் அவதிப்பட்டது, தாய் நாய்.
இந்நிலையில், ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி வந்தார், பெருமாள்சாமி. ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்க, அது குடிக்க மறுத்தது.
குட்டி இல்லாமல் தவித்த நாய், ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்க சென்றது. பாலுக்கு ஏங்கிய ஆட்டுக்குட்டியும், நாயிடம் பால் குடித்து மகிழ்கிறது.
—ஜோல்னாபையன்
