/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பூனைகளை மகிழ்விக்கும் ஆடம்பர ஓட்டல்!
/
பூனைகளை மகிழ்விக்கும் ஆடம்பர ஓட்டல்!
PUBLISHED ON : டிச 15, 2013

பிரிட்டனில், பூனைகளுக்காக, பிரத்யேக சொகுசு ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு, புத்துணர்வு அளித்து, உற்சாகம் ஏற்படுத்துவதற்காக, இந்த ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு, பூனைகள் படுத்து உறங்குவதற்கான, சோபா செட், மசாஜ் மையம், மற்றும் உடற்பயிற்சி கூடமும் உள்ளன. பூனைகளின் கண்களுக்கு இதமளிக்கும் வகையில், பிரமாண்டமான, வண்ண மீன் தொட்டிகளும் உள்ளதால், ஓட்டலுக்கு கிராக்கி அதிகரித்து விட்டது. இதனால், முன் கூட்டியே, 'புக்' செய்தால் தான், அறை கிடைக்கிறது. ஒரு பூனை, ஒரு நாள் தங்குவதற்கு, 3,000 ரூபாய், வாடகை வசூலிக்கப்படுகிறது. ஹூம்... பிரிட்டன் பூனைகள், கொடுத்து வைத்தவை.
-- ஜோல்னா பையன்.

