தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!


PUBLISHED ON : செப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீண்டும் பிறப்பெடுப்பேன்!

* தாயின் ஸ்பரிசத்தை

உன்

அரவணைப்பில் கண்டேன்!

* தந்தையின் நேசத்தை

உன்

கரம் பற்றி

நடக்கையில் கண்டேன்!

* காதலனின் மோகத்தை

உன் காதல் மொழிபேசும்

கண்களில் கண்டேன்!

* கணவனின் கரிசனத்தை

உன்,

'அடியேய்' எனும் ஒற்றை

வார்த்தையில் கண்டேன்!

* யாதுமாகி நின்றாய்!

* கண்ணீருடன்...

கண்ணியத்துடன்...

ஏற்கிறேன் உன்னை...

என்

உயிர் தோழனாய்!

* மீண்டும் பிறப்பெடுப்பேன்!

தாயாய்...

தந்தையாய்...

காதலனாய்...

கணவனாய்...

நீ காட்டும் அன்பினை

தனித்தனியாய் சுகிக்க!

ஆர். மீனா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us