தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை

கவிதைச் சோலை

கவிதைச் சோலை


PUBLISHED ON : ஜூலை 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எவ்வளவு பிடிக்கும்

என்னை பிடிக்குமா பிடிக்காதா என்ற

கேள்வியை முன் வைத்தே

துவங்குகிறாய் ஒவ்வொரு முறையும்

உரையாடலை!

பிடிக்கும் மிகப்பிடிக்குமென

ரகசிய வார்த்தைகளை அள்ளி வீசினாலும்

எவ்வளவு பிடிக்கும் என

அடுத்த கேள்வியை நகர்த்துகிறாய்!

உலகளவு பிடிக்குமென

உதாரணம் காட்டி சிரித்தால்

உலகமே இப்போது கைக்குள் அடக்கம்

வேறு ஏதேனும் சொல் என்று

என்னை சோதனைக்குள்ளாக்குகிறாய்!

ஆகாயமளவு பிடிக்குமென்று

கைகளை விரித்து உன் கண்களை நோக்கினேன்

பறவைகளின்

இறகுகள் தொடும் உயரம் தான் ஆகாயமென

அதற்கும் பழிப்புக் காட்டி சிரிக்கிறாய்!

கடலளவு பிடிக்குமென

கைவிரல் நகத்தை கடிக்கத் துவங்கினேன்

உன் மனதை விட சிறியதென

அதற்கும் முற்றும் போட்டாய்!

என் உயிரளவு பிடிக்குமென

உன்னை கட்டிக் கொண்டேன்

பிறகொன்றும் பேசவேயில்லை நீ...

நானும்!

இ.எஸ்.லலிதாமதி,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us