தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை

கவிதைச் சோலை

கவிதைச் சோலை


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இனி கவலையில்லை!

எவ்வளவு துன்பம் வந்தாலும்

கவலையில்லை

எதிர்நீச்சல் போடுவோருக்கு!

எவ்வளவு ஆழம் வந்தாலும்

கவலையில்லை

நீரில் மிதக்கும் பூக்களுக்கு!

எவ்வளவு இன்பம் வந்தாலும்

கவலையில்லை

சலனமில்லா மனிதர்களுக்கு!

எவ்வளவு ஏற்ற - இறக்கம் வந்தாலும்

கவலையில்லை

நடுநிலையோடு அணுகுவோருக்கு!

எவ்வளவு செல்வம் வந்தாலும்

கவலையில்லை

வள்ளல் தன்மை கொண்டோருக்கு!

எவ்வளவு நஷ்டம் வந்தாலும்

கவலையில்லை|

நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!

எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்

கவலையில்லை

எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!

ஆம் மனிதா...

எது வரினும்

சகலமும் கடந்து சாதனை செய்...

இது உனக்கான சோதனை என நினை...

வெற்றி உனதே!

— முகவை முத்தூஸ், தொண்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us