PUBLISHED ON : ஜூன் 14, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சியில் உள்ள காக்கனாட்டு அரசு சுடுகாட்டில், பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வருகிறார் சலீனா. கடந்த, எட்டு ஆண்டுகளாக, இத்தொழிலைச் செய்து வரும் இவர், ஒரு பிணத்தை எரிக்க, 1,500 ரூபாய் வசூலிக்கிறார். இதில், 400 ரூபாய் கார்ப்பரேஷனுக்கும், மீதி பணத்தில் பிணங்களை எரிக்க தேவையான விறகு போன்ற பொருட்களை வாங்கிய பின், சொற்பப் பணம் தான் கிடைக்கும் என்பவர், மாதம், 25 உடல்களை எரிப்பதாகவும், இந்த வருமானத்தின் மூலம், தன் இரு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி, பெருமைப்படுகிறார்.
—ஜோல்னாபையன்.

