PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
இந்தியாவில், 533க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி இன மக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒடிசாவில் மிக பழமையான, போண்டா இனத்து பழங்குடி மக்கள் இருக்கின்றனர். இவர்களின் முன்னோர் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்.இன்றும் நாகரிக வாழ்க்கையை விரும்பாத இவர்கள், 'கொரோனா' தொற்றுக்கு பயந்து அனைவரும், 'மாஸ்க்' அணிந்தபோதும், இவர்கள் அணிய விரும்பவில்லை.காசிபட்டணம் வாரச் சந்தையில், இவர்கள் பயிரிடும் பொருட்கள் மற்றும் ஆடு மாடுகள் விற்கப்படுகின்றன. சந்தையின் வெளிபுறம் அமர்ந்து, துணிகள் தைத்துக் கொடுக்கின்றனர். வேறு ஓரிடத்தில், இவர்களில் முடி திருத்துபவர்கள் வரிசையாக அமர்ந்து முடியும் வெட்டுகின்றனர். — ஜோல்னாபையன்
