PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, இந்தோனேஷியாவில் இருக்கிறது, கொமோடோ தீவு. கொமோடோ டிராகன் என்ற ராட்சத பல்லிகள் ஏராளமாக வாழும் தீவு என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்டமாக வாழும் இந்த ராட்சத பல்லிகள், மக்கள் குடியிருக்கும் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, எருமை, நாய் போன்றவற்றை அடித்து சாப்பிட்டாலும், இவைகளை கொல்லவோ, துன்புறுத்தவோ கூடாது என, அரசு கடுமையான சட்டம் விதித்துள்ளது. மீறினால் தண்டனைக்குள்ளாவர்.டிராகன்கள் ஊருக்குள் புகுந்தால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், பட்டாசுகள் வெடித்தும் துரத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.டிராகன்கள் வருகையால் இங்குள்ள மக்கள் அமைதியின்றி தவிக்கின்றனர். — ஜோல்னாபையன்
