PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவின் கிராமங்களில் காணப்படும் ஒருவகை மரங்களின் துளிர் இலைகள், விலை மதிப்புள்ளவையாக கருதப்படுகின்றன. இம்மரத்தின் பெயர் மீறா. இங்குள்ள கிராமங்களில் மீறா மரங்கள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன.இதன் இலைகளை சேகரித்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு அனுப்பப்படுகிறது. கிராமங்களில் இதன் விலை கிலோ 5,000 ரூபாய் என்றால் ஏற்றுமதி செய்யப்படும் இடங்களில் 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதன் இலைகளை வாயில் போட்டு மென்றால், போதை ஏற்படுமாம். போதை பொருளாக பயன்படுத்தப்பட்டாலும், இது, ஆப்ரிக்க நாடுகளில் தடை செய்யப்படவில்லை.ஜோல்னாபையன்
