PUBLISHED ON : ஏப் 08, 2018

காதல் என்ற சுகமான அவஸ்தை, எந்த வயதில், எப்போது, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதை நிரூபித்துள்ளது, சீனாவில், சமீபத்தில் நடந்த சம்பவம்.
இங்குள்ள ஹெய்னான் மாகாணத்தைச் சேர்ந்த, 38 வயதான பெண் தொழில் அதிபருக்கு, 23 வயது இளைஞருடன் காதல் மலர்ந்து, திருமணத்தில் முடிந்துள்ளது.
கணவரை விவாகரத்து செய்த இப்பெண் தொழில் அதிபருக்கு, தொழில் ரீதியாக அந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களிலேயே, அந்த இளைஞரை, வெறித்தனமாக காதலிக்க ஆரம்பித்த அந்த பெண், அந்த இளைஞரை திருமணம் செய்ய முடிவு எடுத்தார். ஆனால், திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை, இளைஞரின் பெற்றோர்.
இதையடுத்து, வரதட்சணையாக, ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் கொடுப்பதாக கூறினார், அந்த பெண். உடனடியாக, இளைஞரின் பெற்றோர், திருமணத்துக்கு சம்மதிக்க, பெண் தொழில் அதிபருக்கும், அவரது ஆசைக் காதலனுக்கும்,'ஜாம் ஜாம்' என, திருமணம் நடந்து முடிந்தது.
— ஜோல்னாபையன்.
